கோவை மே 5 கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1,671கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியான உப்பிலிபாளையம் சந்திப்புக்கு 19 வயது வாலிபர் ஒருவர்வந்தார். அவர் திடீரென்று மேம்பாலத்தில் ஏறி நடக்க தொடங்கினார்.. பணிகள் முடிவடையாததால் மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் தடையை மீறி அந்த வாலிபர் சென்றார். அப்போது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லை. உப்பிலிபாளையத்திலிருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை மேம்பாலத்தில் அந்த வாலிபர் நடந்து சென்றார். சிக்னல் அருகே வந்தபோது திடீரென்றுமேம்பாலத்தில் 40 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார் இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேஇறந்தார். இதனால் அந்த வழியாகசென்ற வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரேஸ் கோர்ஸ்போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பிணத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது மராட்டிய மாநிலம், சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சுபம் ( வயது 19 )என்பதும் இவர் கோவை ஆர். எஸ். புரத்தில் ரோகன் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 மாதங்களாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அடுத்த மாதம் ( ஜூன்) தனது பிறந்த நாளை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல செல்வதற்காக வருகிற 22-ஆம் தேதிக்கு அவர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருந்தார். அதற்குள் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் ? என்பது தெரியவில்லை. இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலத்தில் இருந்து குதித்து வடமாநில வாலிபர் தற்கொலை .
