கோவை: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சிபில் ( வயது 42) இவர் கண் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு நேற்று வந்திருந்தார். சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார்.அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஒரு ஆசாமி ஓடினார். உடனே அவர் சத்தம் போட்டார் .அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த ஆசாமியை துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த அனில் தாஸ் என்பது தெரிய வந்தது .அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த வாலிபரிடம் செல்போன் பறிப்பு – வடமாநில தொழிலாளி கைது.!!
