கோவை உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்தவர் மைதீன் பாத்திமா (வயது 35) இவர் அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் ஸ்ட்டரில் வேலைக்கு செல்வது வழக்கம் .அதன்படி நேற்று காலை வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். உப்பிலிபாளையம் சிக்னல் அருகே வந்த போது திடீரென்று ஸ்கூட்டரின் முன் பகுதியில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது .பின்னர் அந்த பாம்பு ஸ்கூட்டரின் கைப்பிடி அருகே வந்து படம் எடுத்து ஆடியது .அதை பார்த்த அதிர்ச்சி அடைந்த மைதீன் பாத்திமா திடீரென்று பிரேக் பிடித்து அந்த ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்தார். பின்னர் பாம்பு, பாம்பு என்று அவர் சத்தம் போட்டார் .இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அந்த ஸ்கூட்டர் கீழே விழுந்ததும் முன் பகுதியில் உள்ள விளக்கு அருகே சென்று பாம்பு ஒழிந்து கொண்டது .இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் . பின்னர் அவர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அந்த ஸ்கூட்டருக்குள் இருந்த பாம்பை லாபகமாக பிடித்தனர் இது 3 அடிநீளம் கொண்ட விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு என தெரிய வந்தது. இந்த பாம்பை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்கூட்டரில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு – அலறி அடித்து ஓடிய பெண்.!!
