வேலூர் மாவட்டம திருப்பத்தூர் சி. கே. சி .நகரை சேர்ந்தவர்விஜய். இவரது மகன் லெனின் ( வயது 34) இவர் கோவை துடியலூர், ஜி. என். மில், திருவள்ளூர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் வாடைக்கு குடியிருந்து வந்தார். கடந்த 4 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இத தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மோகன் குமார் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பார்த்தபோது லெனின் அந்த வீட்டில் உள்ள சமையல் அறையில் லுங்கியை விட்டதில் கட்டி அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு..
