வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்..?

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டி நாளை மறுநாள் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி, குமரி, சென்னை, கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது நாளை மறுநாள் 19 ஆம் தேதி தெற்கு ஒடிசாவுக்கும் வடக்கு ஆந்திர மாநில கடற்கரைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்தில் வரும் நாட்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.தொடர்ந்து இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 19-08-2025 முதல் 23-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நேற்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று (18-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் 19 ஆம் தேதி வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே

சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9 செமீ.

வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 7 செமீ.

நடுவட்டம் (நீலகிரி). சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) தலா 5 செமீ.

குண்டாறு அணை (தென்காசி), அவலாஞ்சி (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 4 செமீ.

ஊத்து (திருநெல்வேலி), பாலமோர் (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) தேவாலா (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஆற்காடு (ராணிப்பேட்டை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பூண்டி (திருவள்ளூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

பெரம்பூர் (சென்னை), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.