கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது .நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மருதமலை முருகன் கோவில் அடிவார பகுதியில் புகுந்தது. பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அந்த யானை உலா வந்தது. இதை பார்த்து கடை நடத்தி வரும் வியாபாரிகள் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர் .இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகளை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் . அது தற்போது வைரலாக பரவி வருகிறது. மருதமலை முருகன் கோவில் அடி வார பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து வருவது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது..
நள்ளிரவில் மருதமலை அடிவாரத்தில் ஒற்றை காட்டுயானை.!!







