தோட்டத்திற்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை கவ்விச்சென்ற சிறுத்தை .பொதுமக்கள் கடும் அச்சம்.

கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 5 மாடுகள் 4 கன்று குட்டி மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார். பாதுகாப்புக்காக நாய்களையும் வளர்த்து வந்தார்.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய்கள் திடீரென்று மாயமானது .அந்த நாய்களை வனவிலங்கு தாக்கிகொன்று இருக்கலாம் என்று சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது இது குறித்து அவர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.. தகவலின் பெயரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் தோட்டத்தில் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் அங்கு ஒரு சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருப்பது தெரிவந்தது .இந்த நிலையில் சரவணன் நேற்று காலை வழக்கம் போல காலை 7 மணிக்கு தோட்டத்திற்கு சென்றார் .அப்போது அங்கு கட்டி போட்டு இருந்த ஒரு கன்று குட்டி படுகாயங்களுடன் நிற்பது தெரிவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சரவணன் அந்த கன்று குட்டியை ஆய்வு செய்து பார்த்தபோது அதன் வலது பின் தொடையில் பெரிய காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறுத்தை தான் கன்று குட்டியை தாக்கியாக தெரிகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்து அப்போது அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்ததால் கன்று குட்டியை தாக்கியது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்..தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.நரசிபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி சாலையில் சுற்றி தெரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுத்தையின் நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.