ஒவ்வொரு கார்டு பேக்கிலும் 52 கார்டுகள் இருக்கும். அவை ஸ்பேட்ஸ், கிளப்ஸ், டைமண்ட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ்.
இந்த நான்கு ராஜாக்களை முறையே ‘கிங் ஆஃப் ஸ்பேட்ஸ்’, ‘கிங் ஆஃப் கிளப்ஸ்’, ‘கிங் ஆஃப் டையமண்ட்ஸ்’ மற்றும் ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸ்’ என்று அழைக்கிறோம். கார்டுகளில் உள்ள இந்த நான்கு ராஜாக்கள் பண்டைய காலத்தின் நான்கு அரசர்களை குறிக்கிறது.
கிங் ஆஃப் ஸ்பேட்ஸில் உள்ளவர் இஸ்ரேலின் ராஜா டேவிட் என்று நம்பப்படுகிறது. கிங் ஆஃப் கிளப்ஸில் உள்ளவர் மெசிடோனியாவின் ராஜா அலெக்சாண்டர் தி கிரேட். கிங் ஆஃப் டையமண்ட்ஸ் கார்டில் உள்ள ராஜா ரோம சக்கரவர்த்தி ஆகஸ்டஸ் சீசர் என்றும், கிங் ஆஃப் ஹார்ட்ஸில் உள்ளவர் பிரெஞ்சு சக்கரவர்த்தி சார்லமேன் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால், ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸ்’-க்கு மீசை இல்லாதது ஏன் என்று நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வோம். டையமண்ட், ஹார்ட், ஸ்பேட் மற்றும் கிளப் என்கிற இந்த குறியீடுகள் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டில் மர அச்சில் பயன்படுத்தப்பட்டது. இதை ஒரு பிரெஞ்சுக்காரர் பயன்படுத்தினார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கார்டுகள் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. அப்போது கிங் ஆஃப் ஹார்ட்ஸின் படத்தை வடிவமைத்தபோது, மர அச்சுக்கள் பழுதடைந்ததால், மீசை விடப்பட்டது.
‘தி கார்டியன்’ இதழின் செய்தியின்படி, 52 கார்டுகளின் வடிவமைப்பு செய்யப்பட்ட போது, தவறுதலாக கிங் ஆஃப் ஹார்ட்ஸின் படத்தில் ராஜாவின் மீசையை வரைவதில் கலைஞர் தவறிவிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மர அச்சுக்கள் பழயதாகி, அது பழுதானதால் அந்த அச்சு மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிலிருந்து கிங் ஆஃப் ஹார்ட்ஸின் படத்தில் ராஜா மீசை இல்லாமலேயே இருந்து வருகிறார். ஆனால், அந்த படத்தை மாற்றாததற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
பிரெஞ்சு சக்கரவர்த்தி சார்லமேன் மிகவும் அழகாக இருந்தாராம். தனது அழகான தோற்றத்திற்கு தனித்துவமான அடையாளமாக அவர் மீசையை வெட்டி விட்டாராம். சந்தர்ப்பவசமாக, சக்கரவர்த்தி சார்லமேனை போலவே ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸில்’ உள்ள படத்தில் வரைந்த கலைஞர் மீசையை விட்டுவிட்டதால், அதன் பின்னரும் கிங் ஆஃப் ஹார்ட்ஸில் மீசை வரையப்படவில்லை.