மலைப்பாதையில் 15 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம்.

கோவை மே 19 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு 72 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள காவற்கல் என்ற இடத்தில் 33 -வதுகொண்டை வளைவில் திரும்பும் போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது இதில் பஸ்சில் பயணம் செய்த ஈரோடு ரங்கசாமி (49) அவரது மனைவி ஜெயராணி ( 48 )வால்பாறை பாலமுருகன் (45) அவரது மனைவி தனலட்சுமி ( 45 ) பாலாஜி ( 33 ) அவரது மனைவி புவனேஸ்வரி ( 27 ) அருணேஸ் (19)திருப்பூர் கலைவாணி ( 30 )பொள்ளாச்சி பாத்திமா ( 61 )வால்பாறை,சதீஷ் ( 42 )திருப்பூர்,லலிதா ( 54) தனுஸ்ரீ ( 9 ) அஜித்குமார் (50)ஈரோடு சேகர் (25)கோட்டூர் சரோஜா ( 70 )சுப்பிரமணி ( 72)வால்பாறை சரவணன் (17) கிணத்துக்கிடவு சிவக்குமார் ( 45 ) வால்பாறை சித்திரைக்கனி ( 55 ) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்துதகவல் அறிந்ததும் காடம்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர்விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்..இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.