ஜெருசலேம்: இஸ்ரேலை இன்னும் தனி நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. இருநாடுகள் இடையே தூதரக உறவுகள் இல்லை இப்படியான சூழலில் தான் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.
ஏற்கனவே இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்கி வரும் நிலையில் அதன் அடுத்த டார்க்கெட்டாக பாகிஸ்தான் இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கராத தாக்குதல் நடத்தி 26 பேரை கொன்றது. இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலமாக நம் நாடு பாகிஸ்தானுக்குள் புகுந்து அடித்தது. இதில் அந்த நாடு நிலைக்குலைந்தது.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டது. இதனால் நடுங்கிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது. தாக்குதல் நடத்தாதீங்க என கெஞ்சியது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது. இப்போது மீண்டும் பாகிஸ்தான் நம் நாடு பற்றி திமிராக பேசி வருகிறது.
இந்நிலையில் தான் இஸ்ரேலின் அடுத்த குறி பாகிஸ்தானாக இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு இருநாடுகள் இடையே அதிகரித்து வரும் பதற்றம் தான் காரணமாகும். அதாவது சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதி அசீம் இப்திகார் பேசினார். அவர் இஸ்ரேலை கண்டித்து கருத்துகளை முன்வைத்தார்.
அசீம் இப்திகார் பேசும்போது, ”கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சட்டவிரோதமானது. அதோடு இது அடாவடியான தாக்குதல். இஸ்ரேல் தொடர்ந்து அண்டை நாடுகளை குறிவைத்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா, சிரியா, லெபனான், ஈரான், ஏமன் மீது தாக்குதல்நடத்தி உள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இப்போது கத்தாரையும் அட்டாக் செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதற்கு இஸ்ரேல் பிரதிநிதி டேனி டானன் பதிலடி கொடுத்தார். இதுபற்றி அவர் பேசுகையில், ”பாகிஸ்தான் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தார். அங்கு வைத்து தான் அவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் மண்ணில் பதுங்கிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கண்டுபிடித்து தீர்த்து கட்டியது. ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஏன் அடைக்கலம் கொடுத்தது.
பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு தான் எப்போதும் பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது. எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அல்லது ஆதரவு கொடுக்க கூடாது என்று ஐநா சபை கூறி உள்ளது. இது இன்றும் பொருந்தும். ஆனால் அதுபற்றி எல்லாம் பாகிஸ்தான் கவலைப்படுவது இல்லை. கண்டுக்கொள்வது இல்லை. இஸ்ரேல் பற்றி தவறாக பேசி வருகிறது” என்றார்.
இஸ்ரேலின் இந்த பதிலடியை கேட்டவுடன் பாகிஸ்தான் பிரதிநிதி நொந்துபோனார். அவரது முகம் வாடியது. இதற்கிடையே தான் இஸ்ரேல் – பாகிஸ்தான் இடையே மோதல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் இப்படி நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இது இஸ்ரேல் தலைவர்களை கோபப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது இஸ்ரேல் ஒரே நேரத்தில் காசா போர், லெபனான் எதிர்ப்பு, ஈரான் எதிர்ப்பு, கத்தார் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை சமாளித்து வருகிறது. இந்த நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் பாகிஸ்தானுடன் அதிகரித்து வரும் மோதலால் இஸ்ரேலின் அடுத்த டார்க்கெட்டில் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஏனென்றால் இஸ்ரேல் – பாகிஸ்தான் இடையே நல்ல உறவு என்பது இல்லை. பாகிஸ்தானை எடுத்து கொண்டால் இஸ்ரேலை தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.
மேலும் தங்கள் நாட்டு மக்கள் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் பாஸ்டோர்ட்டுகளில் கூட இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் இது செல்லுப்படியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருநாடுகள் இடையே நல்லுறவு என்பது இல்லாத சூழலில் இந்த சம்பவம் பேசும்பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.