தவெக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு.!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின்  வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலைத் தான் மட்டுமே வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். நிர்வாகிகள் யாராவது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவோ அல்லது இது தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பவோ கூடாது எனத் தலைமை அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி யாராவது கட்சித் தொண்டர்களிடமோ அல்லது விருப்ப மனு அளித்தவர்களிடமோ பணம் கேட்டாலோ அல்லது மோசடியில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் எவ்வித விசாரணையுமின்றி உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று விஜய்யின் உத்தரவின் பேரில் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், அதேசமயம் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.