தலை இல்லாமல் நீந்தும் மீன்… இணையத்தில் ஆச்சரியத்துடன் பார்த்த 5 மில்லியன் பார்வையாளர்கள்..!!

லகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மீன் ஒன்று தலை இல்லாமல் நீந்தி செல்லும் வீடியோவானது ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

மீன் பெரும்பாலும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவாக இருக்கிறது. இந்த நிலையில் தண்ணீரில் நீந்தும் மீன் எப்படி தலையில்லாமல் நீந்தும் என்பதை யாராலும் நம்ப முடியாது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். அப்படி ஒரு காட்சி தான் இந்த வீடியோவில் உள்ளது. மீன் ஒன்று தலை இல்லாமல் நீந்தி செல்லும் இந்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..