கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் (பிரபு வயது 46 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்து 8 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் ஐ.டி.ஐ. முன்புறம் வந்த ஒரு தனியார் பஸ் முன் பாய்ந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து மனைவி ராஜேஸ்வரி துடியலூர் போலீஸ் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பஸ் முன் பாய்ந்து கட்டிடத் தொழிலாளி தற்கொலை..
