விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

நாமக்கல் திருச்செங்கோடு, பக்கமுள்ள ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அரி சுதா (வயது 21 )இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 30-ஆம் தேதி விடுதியில் தனது ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஊருக்கு செல்லவில்லை. விடுதிக்கும் திரும்ப வில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தாயார் கல்பனா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..