லாட்ஜில் துணிக்கடை ஊழியர் மர்ம மரணம்..

தேனி மாவட்டம் உத்தமபாளையம், பி. ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 38 )இவர் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .காந்திபுரம் நேரூ வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார் . நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் கதவை உடைத்து பார்த்தபோது அவர் படுக்கையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து அவரது மனைவி பாக்கியலட்சுமி காட்டூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.