அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் கூறுகையில், “பைலர் பகுதியில் இருந்து ராயச்சோட்டி பக்கம் வந்து கொண்டிருந்த பேருந்து, மற்றொரு பேருந்தை முந்திச் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோரிக்ஷா மீது நேருக்கு நேர் மோதியது. ஆட்டோரிக்ஷாவில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது பேருந்து சித்தூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.