கோவைபுதூர் அருகே உள்ள பாரூக் நகரை சேர்ந்தவர் கவுதம். இந்து அறநிலைத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் சஞ்சய் ( வயது 14) கோவை புதூரில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .இவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கோவை புதூர் மாதம்பட்டி புதிய பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஓட்டி கொண்டு சென்றான். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி ரோட்டில் ஓரத்தில் இருந்த கல் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சஞ்சயை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சஞ்சய் இறந்துவிட்டான்.இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சாலை ஒரத்தில் உள்ள கல் மீது பைக் மோதி பள்ளி மாணவன் பரிதாப பலி..
