குடும்பம் நடத்த வர மனைவி மறுத்ததால் 69 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை..

பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போது, புது காலனியை சேர்ந்தவர் தங்கராசு ( வயது 69) கூலி தொழிலாளி . இவரது மனைவி ஜோதி ( வயது 69 ) தங்கராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி கோபித்துக் கொண்டு அங்குள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். தங்கராசு நேற்று மகன் வீட்டிற்கு சென்று மனைவியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார் . அவர் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த தங்கராசு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி ஜோதி ஆனைமலை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.