கோவை நூண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பொறுப்பேற்பு!

கோவை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் தர்மபுரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக உடனடியாக யாரும் நியமிக்க படவில்லை. இதனால் மாநகர சிறப்பு நுண்ணறி பிரிவு (எஸ்,ஐ ,சி ) உதவி கமிஷனர் பார்த்திபன் நுண்ணறிவு உதவி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் .பின்னர் அவர் கமிஷனர் ( பொறுப்பு) ரம்யா பாரதி ,துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், தங்கதுரை மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார் .புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி கமிஷனர் கரிகால் பாரிசங்கர் ஏற்கனவே போத்தனூரில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.