கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஊட்டி ரோட்டில் உள்ள பர்லியார் அருகில் நிலச்சரிவு மற்றும் மரம் விழுந்தது. இதனால் இன்று அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓடந்துறையில் இருந்து குட்டையூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரக்கூடியவர்கள் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை







