ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளைப் பொது வெளியிலோ, ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எதிர்மறையாக விமர்சிக்கக் கூடாது எனப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் துறை ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்.தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. முதல்வர் விஜய் மாநிலத்தின் 13-வது முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும், அரசு நடைமுறை வரலாற்றிலும் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அரசு ஊழியர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களைப் பொதுவெளியில் எதிர்மறையாக விமர்சித்துப் பதிவிடக் கூடாது எனத் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அரசு ஊழியர் நடத்தை விதிகள்’ என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை விமர்சித்து ஊடகங்களிலோ, செய்தித்தாள்களிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ, மீம்ஸ் உள்ளிட்டவற்றிலோ பதிவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீதுஅரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படக் கூடாது எனச் சுற்றறிக்கை வெளியாகியிருப்பது எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இதற்குமற்ற கட்சிள் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்







