அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வெள்ளை மாளிகை புதிய ஊடகச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் கேட்டி ஸக்கரியா.இவர் தனது முதல் உத்தியோகப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றுப் பேசியபோது, டொனால்ட் டிரம்ப்-ஐ தனது கணவர் என்று தவறுதலாகக் குறிப்பிட்ட சம்பவம் உலக அளவில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவர், “நான்கு குழந்தைகளை வளர்த்துக்கொண்டு இந்த உயர் அழுத்தப் பதவியை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், தனது கணவர் டைலர் ஸக்கரியா தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்துப் பேசத் தொடங்கினார். அப்போது பதற்றத்தில், “என்னுடைய அதிபர்… மன்னிக்கவும், என்னுடைய கணவர் இங்கேதான் இருக்கிறார்” (My President – excuse me, my husband – is out here) என்று டிரம்ப்-ஐ தனது கணவர் எனக் குறிப்பிட்டு நாக்குப்பிறழ்வாகப் பேசினார்.
உடனடியாகத் தனது தவறை உணர்ந்து சிரித்தபடி அவர் திருத்திக்கொண்ட போதிலும், இந்த 14 நிமிடச் செய்தியாளர் சந்திப்பு மிகவும் பதற்றத்துடனும் தடுமாற்றத்துடனும் அமைந்ததாகப் பல சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன. கேட்டி ஸக்கரியாவின் இந்த சுவாரசியமான மற்றும் சங்கடமான பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் (SM) பயங்கர வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.








