13,000 அடி உயரத்தில் தேசிய கொடி

லிபியாவின் பெங்காசி நகரில் நடந்த ஸ்கைடைவிங் சாகசத்தில் 3 இந்திய வீரர்கள் மூவர்ணகொடியை 13,000 அடி உயரத்தில் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தனர்.

ஒரே விமானத்தில் 65 ஸ்கைடைவர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வானில் இருந்து குதித்து உலக சாதனை படைக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது.

இந்த சாதனை கடந்த 14ம் தேதி அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கேரளாவின் கண்ணூரை சேர்ந்த ஜம்ஷீர் தானலோட், உபியின் கோரக்பூரை சேர்ந்த அபிஷேக் ராவத், பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த இஷா ராஜ் ஆகியோர் மூவர்ண கொடியை வானில் ஏந்தி சாதனை படைத்ததாக கல்ப் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.