கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர் நாராயணன். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி கோவை மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்., அவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர், இவர் இதற்கு முன் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
கோவை மாவட்ட வருவாய் துறை அதிகாரி பொறுப்பேற்பு






