திமுகவுக்கும், தவெகவுக்கும் எந்த வித்தியாசமில்லை

ண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. அவரது ராஜினாமா கடிதம் குறித்து மத்திய தலைமையிடம் இருந்து எனக்கு எதுவும் வரவில்லை.

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை. அவரது பிறந்த நாள் அன்று நான் வாழ்த்து சொன்னேன். அவரும் நலம் விசாரித்தார். நானும் அவரிடம் நலம் விசாரித்தேன்..

தமிழகத்தில் முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் ஏராளமான பாலியல் குற்றங்கள், கஞ்சா பயன்பாடு உள்ளது. கடந்த திமுக அரசுக்கும், இப்போதைய தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் என்ன செயகிறார்கள் என்றே தெரியவில்லை. மின்துறையை பொறுத்தவரையில், ஹார்டு டிஸ்கை திருடிச் சென்றுள்ளனர். ரூ. 425 கோடிக்கு டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே வேடிக்கையாக தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்