இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’ என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் (Su-30 MKI) ரகப் போர் விமானம் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிடப்பட்ட பாதையில் மிகச் சரியாகப் பயணம் செய்து, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தரைமட்டமாக்கித் துல்லியமாகத் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணையானது போர்க்காலங்களில் எதிரி நாடுகளின் ரேடார்களைச் செயலிழக்கச் செய்யவும், அவர்களின் ஒட்டுமொத்த தகவல் தொடர்பு அமைப்புகளையும் (Communication Systems) வேரோடு தாக்கி அழிக்கும் அசாத்திய வல்லமை கொண்டது என்பதால், இந்திய ராணுவத்தின் பலம் தற்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது.







