அமைச்சர்களுக்கு அரசு பங்களா

மிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் அமைச்சர்களின் துறை வாரியாக குடியிருப்பு எண்கள் மற்றும் பங்களா பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியான தகவலின்படி, சுகாதாரம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வீட்டுவசதி, கூட்டுறவு, சமூக நலன், சுற்றுலா, வருவாய் உள்ளிட்ட பல துறைகளின் அமைச்சர்களுக்கு தலைமைச் செயலகம் அருகிலுள்ள அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

# சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்க்கு முல்லை பங்களா (NB No.27) ஒதுக்கப்பட்டுள்ளது.

# மீன்வளத் துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்களுக்கு தாமிரபரணி பங்களா (NB No.15) வழங்கப்பட்டுள்ளது.

# கால்நடைத் துறை அமைச்சர் எஸ். கமல் அவர்களுக்கு NCB No.16 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

# வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பி. ராஜ்குமார் அவர்களுக்கு பாமணி பங்களா (PB No.3) வழங்கப்பட்டுள்ளது.

# கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ் அவர்களுக்கு சிருவாணி பங்களா (NB No.12A) ஒதுக்கப்பட்டுள்ளது.

# சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் ஜெகதீஷ்வர் அவர்களுக்கு NCB No.19, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் அவர்களுக்கு NB No.37 ஒதுக்கப்பட்டுள்ளது.

# கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி அவர்களுக்கு NB No.17 வழங்கப்பட்டுள்ளது.

# போக்குவரத்து துறை அமைச்சர் வி. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு NB No.11 (ரோஜா பங்களா) ஒதுக்கப்பட்டுள்ளது.