மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலைநகர் சென்னையில் நேற்று 2 ரூபாய் 46 காசுகள் உயர்த்தப்பட்டு 107 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அதாவது கடந்த 13 நாட்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஒட்டுமொத்த மக்களின் தலையிலும் பேரிடியை இறக்கும் விதமாக, 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 24 உயர்ந்து 108 ரூபாய் ஒரு காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று டீசல் 23 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 78 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 13 நாட்களில் 5வது முறையாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.







