ரூ.200 நோட்டு வைத்திருந்த மூவர் கைது

கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள நோட்டு அச்சிட்ட சதாம் உசேன் , பைசல் , பாரூக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் பைசல் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது இல்லத்தில் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்து 150 டபென்ட்டால் மாத்திரைகள், ஒரு கிராம் மெத்தபெட்டமயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து 36 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 200 ரூபாய் கள்ள நோட்டுக்களை அவர்கள் பிரிண்டர் உதவியுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட இருப்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு இந்த பிரிண்டரை காஜா மொய்தீன் என்பவர் வாங்கி கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

காஜா மொய்தீன் ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 64 வது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தவர். பிரிண்டர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் , அவர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள நோட்டு அச்சிட்ட சதாம் உசேன் , பைசல் , பாரூக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.