அமெரிக்கா நிரந்தர சரணாக​தி​ அடையும் வரை போர் தொடரும்

மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது.

போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த நிலை​யில் ஈரான் ராணுவம் இவ்​வாறு கூறி​யுள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதி​காரி இப்​ராஹிம் சல்ஃப​காரி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது: எங்​களது ராணுவ வலிமை மற்​றும் தளவாடங்​கள் குறித்த உங்​களது (அமெரிக்​கா) உளவுத் தகவல்​கள் முழு மை​யானவை அல்ல. எங்​களது பரந்த வியூகத் திறன்​கள் குறித்து உங்​களுக்கு எது​வுமே தெரியாது.

ஈரானின் ஏவு​கணை உற்​பத்​தித் தளங்​களை அமெரிக்​கப் படைகள் அழித்​து​விட்​ட​தாக ட்ரம்ப் தப்​புக் கணக்கு போட வேண்​டாம். எங்​களது ஏவு​கணை உற்​பத்தி மையங்​கள், நீண்ட தூரம் சென்று தாக்​கும் திறன் கொண்ட ட்ரோன்கள், நவீன வான் பாது​காப்பு அமைப்​பு​கள், மின்​னணு போர் முறை​களுக்​கான கட்​டமைப்​பு​கள் என அனைத்​தும் எவ்வித பாதிப்​புமின்றி முழு அளவில் செயல்​பாட்​டில் உள்ளன. எனவே, இது​போன்ற தவறான அனு​மானங்​கள், நீங்​கள் ஏற்​கெனவே சிக்​கி​யுள்ள இக்​கட்​டான நிலையை மேலும் ஆழமாக்​கும்.

எங்​களது ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மற்​றும் போர் அமைப்​பு​களைக் கணக்​கிட முயற்சி செய்து நேரத்தை வீணடிக்க வேண்​டாம்; அதில் தோல்​விதான் ஏற்படும். அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் படைகள் மீது மிக வலு​வான, பரந்த மற்​றும் அழி​வு​கர​மான தாக்​குதல்​கள் தொடரும். மத்திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா அவமானத்​தை​யும் நிரந்தர சரணாக​தி​யை​யும் அடை​யும் வரை​யில் இந்த போர் தொடரும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.