தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஒரு புதிய விவகாரம் வெடித்துள்ளது.
தேர்தல் முடியும் வரை நடிகர் விஜய்யின் திரைப்படங்களைத் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குப் புகார்க் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதாலும், தேர்தலில் போட்டியிடுவதாலும், அவரது திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.வழக்கமாகத் தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், விஜய்யின் பழைய மற்றும் புதிய வணிக ரீதியான திரைப்படங்களுக்கும் தடை கோரப்பட்டுள்ளது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கோரிக்கையின் மீது தேர்தல் ஆணையம் என்ன அதிரடி முடிவெடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இது விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.







