தமிழ்நாட்டில் அதிகரித்தது போதைப்பொருள் புழக்கம் – சீமான்!

மிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்குச் சேகரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு அதிகரித்துள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்கள், மக்களின் நலனுக்காக போராடும் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது உள்பட பல்வேறு இலவசங்கள் மூலம் வருங்கால சந்ததிக்கு கூடுதல் கடன் சுமையை அரசு சுமத்தி வருகிறது.