597 கோடி சொத்து!..

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின். தொழில் அதிபர், சமூக அலுவலர் மற்றும் அரசியல்வாதி என வலம் வருபவர் இவர்.
தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் இவர். அதாவது இவரின் சகோதரியைத்தான் ஆதவ் அர்ஜுனா திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு லட்சிய ஜனநாயக கட்சி என்கிற அரசியல் கட்சியும் துவங்கினார். தவெகவில் தனக்கு மரியாதை கிடைக்காததால் நடிகர் தாடி பாலாஜி கூட இந்த கட்சியில்தான் இணைந்தார்..

ஒருபக்கம், தனது மைத்துனர் ஆதாவ் அர்ஜுனா மீது பல புகார்களை கூறி வருகிறார் ஜோஸ் சார்லஸ். ஆதாவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லிப்பர் செல்.. அவர் தவெகவை முட்டி சந்துக்குள் கொண்டுபோய் நிறுத்தி விடுவார்.. விஜய் அவரை நம்பக் கூடாது என்றெல்லாம் அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.