சர்க்கரையைக் குறைங்க… யோகா பண்ணுங்க!’ஆரோக்கியமாக இருங்கள்’

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகா மீதான பற்று குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

யுவராஜ் துவா என்ற இளைஞர், தனது தந்தை சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தடுக்குமாறு பிரதமரிடம் வேடிக்கையாகக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “ஆரோக்கியமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்; சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்து, யோகாவை உங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக உலகத்தையே கொண்டாட வைத்த மோடியின் இந்த ஆரோக்கிய டிப்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.