மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் கோவையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு என்று நஞ்சுண்டாபுரம்,சரவணம்பட்டி, பீளமேடு, வீரகேரளம், சித்தாபுதூர் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட மின் மயானங்கள் உள்ளன. இங்கு கியாஸ் சிலிண்டர் மூலம் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மின் மயானங்களில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
மின் மயானங்களில் கியாஸ் தட்டுப்பாடு-உடல்களை தகனம் செய்வதில் சிக்கல்









