கோவை கணபதி, நல்லாம்பாளையத்தில் அருள்மிகு. ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு பாஜககட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும் ,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று சென்றார்.அவருக்குபாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி.ஆர்.வேலுமயில், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் பி விஜய காண்டீபன், ஓ. பி. சி. மாநில செயற்குழு உறுப்பினர் வி. என். ராஜன் குணா ராதாகிருஷ்ணன், மண்டல் பொது செயலாளர் ராம் பிரபு கவுண்டம்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சகாதேவன் திருமுருகன் ஆர்பிஎஸ் உரிமையாளர் ஆர் பாலகிருஷ்ணன் நாராயணன், பட்டுராஜ் ஆகியோர்சால்வை அணிவித்து வரவேற்றனர்.,அருள்மிகு ஸ்ரீ மூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் திருக்கோயில் குருக்கள் சிவ ஸ்ரீ குமார் சிவம் சிறப்பு பூஜை செய்து மரியாதை செலுத்தினார்.
வானதி சீனிவாசன் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம்.!







