ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம் ‘ஜெனோரா’ என்ற அதிநவீன வில்லாக்கள் கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனம், கோயம்புத்தூர் கோல்வின்ஸ் பகுதியில், அதிநவீன சொகுசு வில்லாக்களை உள்ளடக்கிய ஜெனோரா என்னும் அழகிய குடியிருப்பினை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ. 113 கோடி மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. ஜெனோரா வில்லா குடியிருப்பு, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், அவினாசி சாலையில் உள்ள ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இது நகரத்தின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும்.இந்த ப்ராஜெக்ட், முப்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் பெரிய அளவிலான துணிநூல் தொழில்களை உருவாக்கியும், நிர்வசித்தும் வருகிற தொழில்முனைவோர்கள் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிறது.
ஜெனோரா-வில் 5, 7 மற்றும் 11 சென்ட் பரப்பளவுகளில் மூன்று மாடிகள் கொண்ட 59 வில்லாக்கள் கொண்டுள்ளது.

அதிக இட வசதியுடன் கூடிய தனித்துவம் நிறைந்த சௌகரியமான வாழ்க்கை அனுபவத்தை பெறுகிற விருப்பத்துடன் வீடு வாங்குபவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி முதல் ரூ. 12 கோடி வரையிலான விலைகளுடன், இந்த ப்ராஜெக்ட், மேற்கு தமிழ்நாட்டின் பிரீமியம் குடியிருப்பு வில்லாகளில் ஒன்றாகத் திகழ்கிறது.ஒவ்வொரு வில்லாவும் விசாலமான பால்கனிகள், நேர்த்தியான கட்டிடக்கலை மற்றும் அழகிய கட்டுமானம், நீண்ட கால நீடித்துழைப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் கவனமாகத் திட்டமிடப்பட்ட முகப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அவிநாசி சாலை பகுதியில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.









