நான் ரெடி… டிடிவி,இபிஎஸ் நீங்க ரெடியா..?

தேனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது தற்போதைய அரசியல் நிலை குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார்.
“எங்களைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாகத் தெரியவில்லையா?” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை ஒன்றிணைப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். குறிப்பாக, வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை எந்தவொரு ஒருங்கிணைப்புக் குழுவோ அல்லது தேர்தல் பணிகளோ தொடங்கப்படவில்லை என்பதை அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனக்கு, தேர்தல் போட்டியை விடக் கட்சி ஒற்றுமையே முக்கியம் என அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைந்த அதிமுக என்பதே தனது ஒரே இலக்கு என்றும், அதற்காகப் பொறுமை காத்து வருவதாகவும் அவர் கூறினார். ஓபிஎஸ்-ன் இந்த “பாவம்” என்ற வார்த்தைப் பிரயோகம் மற்றும் தேர்தல் தயக்கம் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.