கோவை பெரியநாயக்கன்பாளையம் முருக பக்தர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யூ .பணியாளர்கள் இணைந்து, 50 ஆண்டு காலமாக பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும், தை மாதம் 11ஆம் நாள் பழனி பாதயாத்திரை நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு முதல் V. வெங்கடசாமி,R. கணேசன் ( குருசாமி) S. M மோகனசுந்தரம் , V. பழனிச்சாமி,K.V. ராஜகோபாலன் ஆகியோர்களால் துவங்கப்பட்டு, இந்த 50ஆம் ஆண்டு பொன்விழா, ஆண்டாக பழனி பாதயாத்திரை நடை பெற்றது .

இந்த ஆன்மீக யாத்திரையில் கலந்து கொள்ளும் முருக பக்தர்கள் அனைவருக்கும் 50 ஆண்டு காலமாக யாத்திரை சிறப்பாக நடைபெறுவதற்கு பொருள் உதவியும், நிதி உதவியும் வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும், முருகப்பெருமானின் அருளும் ஆசியும் கிடைத்து, கணேசன் குருசாமி அவர்களின் வழிகாட்டுதலுடன், அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டுகிறோம். இப்படிக்கு இறை பணியாற்றும் பழனி பாதயாத்திரை குழு.









