கோவை நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு திடீர் மரணம்..

கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ் ( வயது 43) இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குனியமுத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வைத்து இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர்கள் பார்த்திபன், மணிவர்மன் மற்றும் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் போலீஸ் வேன் மூலம் சொந்த ஊரான மதுரை, டீ. கல்லுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மரணம் அடைந்த கனகராஜ் திருவுருவப்படம் மாநகர காவல் ஆணையர் அலுவலக வரவேற்பு அறையில் மாலையிட்டு வைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினரும் அமைச்சுப் பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.