கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தில் இருந்து இறங்கி அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், நஞ்சப்பா ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வாகனங்களும் உட்பிலிபாளையம் ரவுண்டான வழியாக செல்கின்றன.அங்கு வாகனங்கள் அதிக அளவு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நேற்று ரவுண்டானா பகுதியிலும் பழைய மேம்பால பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டுகள் கடும் அவதி அடைந்தனர். இந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது.உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது..
உப்பிலிபாளையம் ரவுண்டானா போறீங்களா..?









