விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம்.!!

தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அரசு விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் தொழிலாளர் சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. விதிகளை மீறினால் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.