தஞ்சாவூர்: திமுக மகளிர் அணி மாநாடு தஞ்சாவூரின் திருமலை சமுத்திரத்தில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று பெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மைக் என நினைத்து கண்ணாடி முன் நின்று பேசியிருக்கிறார். கடந்த 2023 முதல் மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அங்கு பெண்கள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமையை நாடா பார்த்தது.
அங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என, ஆட்சிக்கலைப்பு செய்து.. ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், ஹத்ராஸ், குஜராத் கலவரம் என பல இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளில், குற்றவாளிகளுக்கு சப்போர்ட் செய்த கட்சிதான் பாஜக” என விமர்சித்திருக்கிறார்.







