நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டுயானைகள்.!!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் மற்றும் புதர்களை அளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் அதேபோல வாழை மரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆண்டு தோறும் வழக்கம் போல் வந்து செல்லும் இரண்டு காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அழிக்கப்பட்ட வாழை மரங்களை இழுத்து நின்றுள்ளது இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் உடனடியாக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த யானைகளை குடியிருப்பு பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர் இதனால் அச்சத்தில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்