“ஆழியில் ஒரு தடம்”கடல் வாழ் உயிரின கண்காட்சி!

“ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரி நிறுவனங்கள் சார்பில், “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில் சிறப்பு கடல் வாழ் உயிரின புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் இந்திய கடலில் ஆராய்ச்சியின் கடல் உயிர் ஆய்வாளர் மறைந்து விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ் லால் மோகனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த கண்காட்சியில் டால்பின், திமிங்கலம் மற்றும் அரிய கடற்பசு ஆகியவற்றின் வாழ்வியல்,உணவு பழக்கங்கள்,ஒலி தொடர்பு முறைகள், இடம் பெயர்வு ஆகியவற்றை உள்ளடக்கி கண்காட்சியின் கையேட்டை வெளியிட்டனர்.கண்காட்சியின் முக்கிய சிறப்பு அம்சங்களாக டால்பின்,திமிங்கலம், கடற்பசு ஆகிய அறிய கடல்வாழ் பாலூட்டிகளின் உயர்தர புகைப்படங்கள், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

கடற்பசு என்பது மிக குறைவாக அறியப்பட்ட கடல் பாலூட்டி ஆகும். அதன் தன்மைகள், வகைகள், வாழ்வியல் அதிசயங்கள் மற்றும் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்துள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள்,நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.