சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.







