அந்தரத்தில் பழுதடைந்த ராட்சத ராட்டினம்..!

கோவை பீளமேட்டில் கொடிசியா அருகே தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு ஒரு ராட்சத ராட்டினத்தில் ” ஸ்கை லிப்ட் ” பலர் ஏறி உட்கார்ந்து இருந்தனர். அது சுழலும் போது திடீரென்று பழுதடைந்தது. இதனால் 80 அடி உயரத்தில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.அந்தரத்தில் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது இதில் 10 பெரியவர்கள் ,2 சிறியவர்கள் அடங்குவார்கள்.இவர்கள் உயரத்தில் இருந்து கதறினார்கள்.இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவை தெற்கு பகுதி தீயணைப்பு நிலையத்திலிருந்து உயரமான கட்டிடத்தில்மீட்க உதவும் “ஸ்னார்கல் ” வாகனம் கொண்டுவரப்பட்டு 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.அதன் பின்னர் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.தீயணைப்பு படையினரை பாராட்டினார்கள்.