32yrs 7.5cr DMK நபர் ஆக்கிரமிப்பு|மீட்பு|

32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர்.

கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் நடந்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்தது சட்டவிரோதம் எனக் கூறி, உடனடியாக அந்த இடத்தை மீட்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கோவை மாநகராட்சி அதிகாரிகள், ஜேசிபி இயந்திரங்களுடன் சென்று சிவஞானம் ஆக்கிரமித்து இருந்த 13 சென்ட் நிலத்தை மீட்டனர். இதன் இன்றைய சந்தை மதிப்பு 7.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.