தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், தேசிய கீதம் பேரவையில் ஒலிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து ஆளுநர் சற்றுமுன் வெளியேறினார்.
கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், இந்த ஆண்டும் பேரவையை புறக்கணித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை.








