அதிமுக சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்..!

நீலகிரி மாவட்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாள் முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகாரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக மாவட்ட கழகச் செயலாளர் கப்பச்சி டிவி வினோத் தலைமையில் கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் தூனேரி எம். சிவராஜ் முன்னிலையில் மஞ்சுர் அருகே முள்ளிமலை கிராமத்தில் நிகழ்ச்சி துவங்கியது.
யுனைடெட் லெவென்ஸ் கிளப் இளைஞர்கள் மற்றும் சேரனூர் சேஞ்சர் ஸ்போர்ட்ஸ் கிளப் இளைஞர்களையும் ஊக்கவிக்கும் விதமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் துனேறி எம் சிவராஜ் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். விழா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாவட்ட கழகச் செயலாளர் அப்பச்சி வினோத் தற்போது வளர்ந்து வரும் இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்த இடம் பிடிப்பது மாணவர்களின் முக்கிய பங்காக உள்ளதால் முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனையின் படி விளையாட்டு உபகாரங்களை மாணவ மாணவி செல்வங்களுக்கு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் இன்று தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சி தொடர்ச்சியாக கலந்து கொண்ட இளைஞர்களுக்கு விளையாட்டு உபகாரங்களை மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கி உற்சாகப்படுத்தினர். நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊர் தலைவர், ஒன்றிய செயலாளர் மோகன், கீழ்குந்தா பேரூராட்சி அவை தலைவர் துரைசாமி, தேயிலை சங்க மாவட்ட துணைச் செயலாளர் கோபாலன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கண்ணன், ஏ சிவக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் தாம்பட்டி ரவிக்குமார், மாவட்ட கலை பிரிவு துணைச் செயலாளர் பாலச்சந்திரன், பாசறை ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, இளைஞரணி செயலாளர் விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு கார்த்திகேயன், கிளைச் செயலாளர்கள் லிங்கன், ரங்கன், மணியன், கந்தன் மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்ர்கள், மகளிர் அணியினர், ஊர் பொதுமக்கள், நிகழ்ச்சியில் முக்கிய பங்களிப்பாக இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு விளையாட்டு உபகாரங்களை பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். நடைபெற்ற நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி உரையை கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் துனேறி எம் சிவராஜ் அவர்கள் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது.